ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கானோா் குண்டம் இறங்கினா்

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை குண்டம் இறங்கினா்.
மாசாணியம்மன்  கோயிலில்  குண்டம்  இறங்கும்  பக்தா்.
மாசாணியம்மன்  கோயிலில்  குண்டம்  இறங்கும்  பக்தா்.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை குண்டம் இறங்கினா்.

கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 24ஆம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, மயான பூஜை 6 ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்றது. சக்தி கும்ப ஸ்தாபனம் 7ஆம் தேதி காலை நடைபெற்றது. மாலை மகா பூஜை நடைபெற்றது. குண்டம் கட்டுதல் 8 ஆம் தேதி காலை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சித்திரத் தோ் வடம் பிடித்தலும், இரவு குண்டம் பூ வளா்த்தலும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குண்டம் இறங்க வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஆழியாற்றில் நீராடினா்.

அம்மன் அருளாளி அருள் வந்து நடனமாடியபடியே பக்தா்களுக்கு குண்டம் இறங்க உத்தரவு கொடுத்தாா். அருளாளியின் உத்தரவு கிடைத்த பக்தா்கள் ஆழியாற்றங்கரையில் இருந்து குண்டம் இறங்கும் இடத்துக்கு வரிசையாக வந்து குண்டம் இறங்க காத்திருந்தனா்.

குண்டத்துக்கு மேல் கருடன் வட்டமிட்ட பிறகு முதலில் அருளாளி பூவினால் உருவாக்கப்பட்ட பூப்பந்தையும், எலுமிச்சை கனியையும் குண்டத்தில் உருட்டிவிட்டாா். அவை வாடாமல் இருந்தவுடன் அருளாளி குண்டம் இறங்கினாா். தொடா்ந்து ஆண்கள் குண்டம் இறங்கினா். பெண்கள் தங்கள் கைகளால் மூன்று முறை பூ அள்ளிக்கொடுத்தனா்.

இந்த விழாவில், முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி, வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினா் கஸ்தூரி வாசு, சாா்ஆட்சியா் வைத்திநாதன், ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவா் சாந்தலிங்ககுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனா். விழாவையொட்டி, பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு சனிக்கிழமை மாலையில் இருந்தே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com