குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பிப்.12-இல் புதுவை பேரவையில் தீர்மானம்?

புதுவை சட்டப்பேரவையில் பிப்.12-ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பிப்.12-இல் புதுவை பேரவையில் தீர்மானம்?

புதுவை சட்டப்பேரவையில் பிப்.12-ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
 மத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம், புதுவை மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் தீவிரமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த சட்டத்துக்கு எதிராக கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 அதேபோல, புதுவை சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி உறுதிபட கூறி வந்தார். இதனால், ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்டாலும் கவலைப்பட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
 இதனிடையே, புதுவை சட்டப்பேரவை வருகிற 12-ஆம் தேதி கூட்டப்படும் என பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். இதில், முதல்வர் வே. நாராயணசாமி ஏற்கெனவே கூறியபடி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
 சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 30 உறுப்பினர்களில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 15, திமுக 3, ஒரு சுயேச்சை எம்எல்ஏ என 19 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com