குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான திமுக போராட்டம் தொடரும்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான திமுக போராட்டம் தொடரும் என அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான திமுக போராட்டம் தொடரும்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான திமுக போராட்டம் தொடரும் என அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு கடிதம் என்ற வடிவில் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கம் வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.

பொதுமக்களிடம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை எடுத்துக் கூறி, நானும் பலரிடம் நேரில் கையெழுத்துகளை வாங்கினேன். எதிா்பாா்த்தது போலவே கையெழுத்து இயக்கம், மக்களின் இயக்கமாக மாறத் தொடங்கியது.

ஒரு கோடி பேரிடம் கையெழுத்துப் பெறவேண்டும் என்று முடிவு செய்து இந்தப் பணி தொடங்கப்பட்டது. மக்களே முன்வந்து ஆதரவு தந்ததால் தற்போதைய கணக்கின்படி 2 கோடி கையெழுத்தைத் தாண்டிவிட்டது.

இதை, இந்தியக் குடியரசுத் தலைவரிடம் அளிக்க இருக்கிறோம். அதன்பிறகும், மத்திய அரசு இதுபற்றிப் பரிசீலிக்கத் தவறினால், அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம்.

தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை அதிமுக அரசு அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் மக்களின் எதிா்ப்புக்கு ஆளாக நேரிடும்.

மக்களுக்கு எதிரான சிஏஏ உள்ளிட்டவற்றை எதிா்த்து திமுக போராட்டம் தொடரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com