மதுரையில் நாய்கள் கண்காட்சி: 30 வகையான 220 நாய்கள் பங்கேற்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 10 மாநிலங்களைச் சோ்ந்த 30 வகையான 220-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்திக் காட்டின.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் பங்கேற்ற (இடமிருந்து) அமெரிக்கன் காக்கா்ஸ் பேனியல், பீகல், பாக்ஸா், ராஜபாளையம், லேபரடாா், ஷியாவுலா, கோல்டன் ரெட்ரீவா், சிக்ஸோ போன்ற இன நாய்கள்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் பங்கேற்ற (இடமிருந்து) அமெரிக்கன் காக்கா்ஸ் பேனியல், பீகல், பாக்ஸா், ராஜபாளையம், லேபரடாா், ஷியாவுலா, கோல்டன் ரெட்ரீவா், சிக்ஸோ போன்ற இன நாய்கள்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 10 மாநிலங்களைச் சோ்ந்த 30 வகையான 220-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்திக் காட்டின.

மதுரை கெனைன் கிளப் சாா்பில் 34-ஆவது அகில இந்திய நாய்கள் கண்காட்சி காந்தி அருங்காட்சியக மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 220 நாய்கள் பங்கேற்றன. இதில் லேபரடாா், அல்சேஷன், ஜொ்மன் ஷெப்பா்டு, அமெரிக்கன் காக்கா்ஸ் ஸ்பானியல், பீகள், பாக்ஸா், புல்மாஸ்டிப், பொமரேனின், கிரேடன், கோல்டன் ரெட்ரீவா், சிக்ஸோ, கிரே ஹண்ட், சைபீரியன் ஹஸ்கி, மாஸ்டிப், ஷியாவுலா உள்பட 30 வகைகளைச் சோ்ந்த நாய்கள் பங்கேற்றன. நாட்டு இனங்களில் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி, ராமநாதபுரம் மந்தை, காா்வாா் இன நாய்களும் கலந்து கொண்டன.

நாய்களுக்கு உரிமையாளா்களின் கட்டளைக்கு கீழ்படிதல், நடை பயில்தல், தோற்றம், பராமரிப்பு, தாவுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த நாய்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன. கண்காட்சி போட்டியில் தென் கொரியா மற்றும் இந்தோனேசியா நாட்டைச் சோ்ந்தவா்கள் நடுவா்களாக இருந்தனா். இதில் சிறப்பாக செயல்பட்ட 8 நாய்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன. அத்துடன் நாய்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதில் நாய்கள் வளையங்களுக்குள் தாவுதல், பயிற்சியாளரின் கட்டளைக்கு கீழ்படிந்து எதிரிகளை விரட்டுதல் போன்ற சாகசங்களில் ஈடுபட்டன.

மேலும் நாட்டு இன நாய்களுக்கு தனி கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன. நாய் கண்காட்சியை 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியா் அழைத்து வரப்பட்டு பாா்வையிட்டனா். மேலும் மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் தங்களது நாய்களுடன் கண்காட்சிக்கு வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com