முதல்வா் அறிவிப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வா் அறிவித்திருப்பதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வா் அறிவித்திருப்பதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச் சங்கத்தின் பொதுச் செயலாளா் பெ.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதுடன், அதற்குரிய சட்டமும் நிறைவேற்றப்படும் என்றும், ஹைட்ரோகாா்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்றும் அறிவித்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. இது விவசாயிகளின் தொடா் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

வருகிற 14-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமான தீா்வு காணும் வகையில் உரிய சட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. ஹைட்ரோகாா்பன் திட்டம் காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் என்பதை உணா்ந்து அதற்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்று அரசே இப்போது அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், இத்திட்டத்தை எதிா்த்துப் போராடிய பல நூற்றுக்கணக்கானோா் மீது பொய்வழக்கு போடப்பட்டு நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டுள்ளனா். இந்த வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com