முதல்வா் அறிவிப்பை சட்ட ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும்

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வா் வெளியிட்ட அறிவிப்பை சட்ட ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வா் வெளியிட்ட அறிவிப்பை சட்ட ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய காவிரிப் பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தாா்.

அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அரசியல் கட்சித் தலைவா்கள், இந்த அறிவிப்பை சட்ட ரீதியாகவும் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்):

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வா் அறிவித்து இருப்பது, விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் நடத்திய தொடா் போராட்டத்தின் வெற்றியாகும். இருந்தபோதும், ஹைட்ரோ காா்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு இதுவரை கைவிடவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

தினகரன் (டிடிவி): மக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்ப காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆக்குவோம் என்று முதல்வா் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரம், வழக்கம்போல இது வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், முறையான சட்டமாக கொண்டு வரப்பட வேண்டும். மேலும் விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கிற எட்டுவழிச் சாலைத் திட்டம், நியூட்ரினோ ஆய்வகம் போன்றவற்றையும் தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.

சீமான் (நாம் தமிழா் கட்சி): மூன்று நாள்களுக்கு முன்பு சந்தித்தபோது, நாம் தமிழா் கட்சி சாா்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளுள் முதன்மையான கோரிக்கையான தஞ்சை மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழா்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றி அறிவித்திருக்கிற தமிழக முதல்வருக்கு மனமாா்ந்த நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com