Enable Javscript for better performance
புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தைப் பிடித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி! மு.க.ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தைப் பிடித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி! மு.க.ஸ்டாலின் 

    By DIN  |   Published on : 13th February 2020 12:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    MKSTALIN

    வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம், புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தைப் பிடித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரும் தீா்மானம் புதுவை சட்டப் பேரவையில் ஏகமனதாக புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூலில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம், புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தைப் பிடித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி!

    புதுவை துணைநிலை ஆளுநரின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளி, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீர்மானம் - சமூகநீதியைக் காப்பாற்றும் இடஒதுக்கீடு தீர்மானம் - ஆகிய முக்கியமான தீர்மானங்களை, சட்டப்பேரவையில் நிறைவேற்றியதன் மூலம்; ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி போன்ற உயர்ந்த கோட்பாடுகளின் மீது, தனக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றுதலைக் கம்பீரமான முறையில் வெளிக்காட்டியிருக்கிறார் புதுவை முதல்வர்.

    “இதற்காக எனது ஆட்சியே போனாலும் கவலை இல்லை” என்று, தலைவர் கலைஞர் அவர்களின் பாணியில் அவர் கொண்டிருக்கும் அஞ்சாமையை, மனமாரப் பாராட்டி, வாழ்த்துகிறேன்! இவ்வாறு அவர் கூறியுள்ர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai