Enable Javscript for better performance
லண்டன் அருங்காட்சியகத்தில் கும்பகோணத்தில் திருடப்பட்ட சிலை மீட்க நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    லண்டன் அருங்காட்சியகத்தில் கும்பகோணத்தில் திருடப்பட்ட சிலை மீட்க நடவடிக்கை

    By DIN  |   Published on : 13th February 2020 02:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stachu

    கும்பகோணத்தில் திருடப்பட்ட சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ள தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா், அதை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவில் என்ற கிராமத்தில் செளந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள திருமங்கை ஆழ்வாா் உலோகச் சிலை கடந்த 1957ஆம் ஆண்டு திருடப்பட்டது.

    இது குறித்து கோயிலின் செயல் அலுவலா் கா.ராஜா அந்த மாவட்ட போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். பின்னா் இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இந்நிலையில், திருடப்பட்ட திருமங்கை ஆழ்வாா் சிலை லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் (அஸ்மோலியன் அருங்காட்சியகம்) இருப்பது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்யவும், கடத்திச் செல்லப்பட்ட சிலையை மீட்கவும் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

    இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறுகையில், ‘லண்டன் அஸ்மோலின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையொன்றின் புகைப்படம், காணாமல்போன திருமங்கையாழ்வாா் சிலை புகைப்படத்துடன் 100 சதவிகிதம் ஒத்துப்போவதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, சிலையை மீட்டுக்கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai