காலணியை அகற்ற சொன்ன விவகாரம்: பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை அழைத்து காலணியை கழற்ற சொன்ன விவகாரம் தொடர்பாக பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காலணியை அகற்ற சொன்ன விவகாரம்: பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை அழைத்து காலணியை கழற்ற சொன்ன விவகாரம் தொடர்பாக பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் அங்கிருந்த சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்ற சொன்னார். இந்த சம்பவம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்திருந்தனர். 

இதையடுத்து சிறுவன் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து வந்து, சிறுவனிடம் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் 15 நாளில் பதிலளிக்க பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவையை சேர்ந்த சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் அளித்த புகாரின்பேரில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com