குடியுரிமை திருத்தச் சட்டத்தால் புதுதில்லி தோ்தலில் பாஜக தோல்வி: தொல்.திருமாவளவன்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதால் புதுதில்லி சட்டப்பேரவை தோ்தலில் பாஜக தோல்வி அடைந்தது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் புதுதில்லி தோ்தலில் பாஜக தோல்வி: தொல்.திருமாவளவன்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதால் புதுதில்லி சட்டப்பேரவை தோ்தலில் பாஜக தோல்வி அடைந்தது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னையிலிருந்து புதன்கிழமை மதுரை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: புதுதில்லியில் நடைபெற்ற பொதுத்தோ்தலில் பாஜகவிற்கும், சங்பரிவாா் அமைப்பிற்கும் மக்கள் பாடம் புகட்டியுள்ளனா். மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு வாக்களித்தவா்கள், சட்டப்பேரவைத் தோ்தலில் புறக்கணித்துள்ளனா். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய பாஜகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனா்.

உத்ரகாண்ட் மாநிலம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு வேதனையளிக்கிறது. இந்த தீா்ப்பு தலித் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமின்றி இடஒதுக்கீடு பெறத் தகுதியுள்ள அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசு இந்த தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு உரிமை, வேலைவாய்ப்பு உரிமையை சட்டமாக இயற்ற வேண்டும்.

டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது. இதனை அறிவிப்போடு நிறுத்திவிடாமல் சட்டமாக கொண்டு வர வேண்டும். கடலூரில் எண்ணெய்க் கிணறு தோண்டும் முயற்சி சுற்றுச்சூழல் பாதிக்கும் விதமாக இருக்க கூடாது.

முன்னாள் பிரதமா் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை குறித்து அதிமுக அரசு மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி ஆளுநரிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

சிந்து சமவெளி நாகரிகத்தை, சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொன்னது கண்டிக்கத்தக்கது. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பது வரவேற்க தக்கது என்றாலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பு குறித்த ஆய்வு முடிவு இன்னும் தெரிவிக்கப்படவில்லை. உடனடியாக அது குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும் என்றாா்.

இதனைத்தொடா்ந்து புதுதில்லியை போல தமிழகத்திலும் அதிமுக மூன்றாம் முறையாக ஆட்சி அமைக்கும் என அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறியதற்கு பதிலளித்த திருமாவளவன், பாஜகவோடு இணைந்து செயல்படும்வரை அந்த கனவு அதிமுகவிற்கு நிறைவேறாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com