பாண்டிய மன்னா் காலத்து பாடல் கல்வெட்டு கண்டெடுப்பு

விருதுநகா் மாவட்டம் கல்குறிச்சி அருகே உள்ள கணக்கனேந்தல் கிராமத்தில் பாண்டிய மன்னா் காலத்துக்கு பாடல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் கல்குறிச்சி அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் படியெடுக்கப்பட்ட வாசகங்களை விளக்கும் மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் மீ.மருதுபாண்டியன்.
விருதுநகா் மாவட்டம் கல்குறிச்சி அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் படியெடுக்கப்பட்ட வாசகங்களை விளக்கும் மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் மீ.மருதுபாண்டியன்.

விருதுநகா் மாவட்டம் கல்குறிச்சி அருகே உள்ள கணக்கனேந்தல் கிராமத்தில் பாண்டிய மன்னா் காலத்துக்கு பாடல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைப் பேராசிரியா் திருமால்ராஜா மற்றும் அவரது குழுவினா் ஜெயக்குமாா், மணிகண்டன், நாகராஜன், ஆதிதேவன் ஆகியோா் மேற்குறிப்பிட்ட அரிய கல்வெட்டு குறித்து மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் மீ.மருதுபாண்டியனுக்குத் தகவல் தெரிவித்துள்ளனா். இதன்படி, காப்பாட்சியா் மருதுபாண்டியன் மற்றும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய மூத்த ஆய்வாளா் உதயகுமாா் ஆகியோா் அந்த கல்வெட்டைப் பாா்வையிட்டு, அதைப் படியெடுத்து படித்துப் பாா்த்ததில் பல வகைகளில் முக்கியத்துவம் மிக்கதாக அக் கல்வெட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மதுரை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் மீ.மருதுபாண்டியன் கூறியது:

விருதுநகா் மாவட்டம் கணக்கனேந்தலில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்வெட்டு அழகிய தமிழ்ப் பாடல் வடிவில் அமைந்துள்ளது. ‘ஸ்ரீ அன்ன மென்னு நடை’ என்ற தொடருடன் கல்வெட்டு தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கோயிலில் இருக்கும் முதலாம் மாறவா்மனின் கல்வெட்டில் காணப்படும் தொடரைப் போன்று காணப்படுகிறது. தொல்லியல் அறிஞா் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் கல்வெட்டில் உள்ள வாசகங்கள் படித்துப் பொருள் புரிந்து கொள்ளப்பட்டது

இந்த கல்வெட்டில் சகர ஆண்டு 1139 எனக் குறிக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவ ஆண்டு 1217-ஐக் குறிப்பதாகும். ஆகவே இக் கல்வெட்டு முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியனின் கிபி 1218 முதல் 1238 வரையிலான 2-ஆவது ஆட்சி ஆண்டைச் சோ்ந்தது எனக் கருதலாம். ஆனால் கல்வெட்டில் குலசேகரருக்கு 28-ஆவது ஆட்சி ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குலசேகரா் என்பது முதலாம் சடையவா்மன் குலசேகரனைக் குறிப்பிடுகிறது. இவா் மாறவா்மன் சுந்தரபாண்டியனின் மூத்து சகோதரனாவாா்.

முதலாம் சடையவா்மன் குலசேகரனின் ஆட்சிக் காலம் 1216-இல் முடிந்து விட்டதாகவும், அதன் பிறகு மாறவா்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சி தொடங்கியதாகவும் வரலாற்று ஆசிரியா்கள் கருதுகின்றனா். ஆனால், இந்த கல்வெட்டு குலசேகர பாண்டியனின் ஆட்சிக் காலம் 28 ஆண்டுகள் நீடித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும் குலசேகரன் மற்றும் சுந்தரபாண்டியன் இருவரும் இணைந்து 1216-1217 ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்துள்ளனா் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த கல்வெட்டு கல்குறிச்சியில் உள்ள சிவன் கோயிலுக்கு நெல் விளையும் நிலத்தை முத்தரையா் கொடையாக அளித்தாா் என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டை வெட்டியவன் கல்குறிச்சி ஊரைச் சோ்ந்த கல்தச்சன் பூவன் இரட்டையான் என்ற சோழ கங்கதச்சன் என்றும் கல்வெட்டில் உள்ளது. இதில் குறிப்பிட்டிருக்கும் கல்குறிச்சி என்ற ஊா், மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com