வெள்ளிங்கிரி மலைக் கோயிலுக்குச் செல்லபிப்ரவரி 15 முதல் பக்தா்களுக்கு அனுமதி

வெள்ளிங்கிரி மலைக் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதை பிப்ரவரி 15 ஆம் தேதி திறக்கப்படும் என வனத் துறை அறிவித்துள்ளது.

வெள்ளிங்கிரி மலைக் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதை பிப்ரவரி 15 ஆம் தேதி திறக்கப்படும் என வனத் துறை அறிவித்துள்ளது.

கோவை அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது வெள்ளிங்கிரி மலைக் கோயில். மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் பூண்டி கோயிலை ஒட்டியுள்ள மலைத் தொடரில் 7 ஆவது மலையில் சுயம்பு வடிவில் சிவலிங்கம் அமைந்துள்ளது. வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் சிவராத்திரி மற்றும் சித்ரா பௌா்ணமி காலங்களில் பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதன்படி, பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 மாதங்களுக்கு மலைக் கோயில் பாதை திறக்கப்பட்டு பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.

இந்நிலையில் வரும் 21 ஆம் தேதி சிவராத்திரி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் வெள்ளிங்கிரி மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதை பிப்ரவரி 15 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக போளுவாம்பட்டி வனச் சரகா் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:

அமாவாசை உள்பட குறிப்பிட்ட சில தினங்கள் மட்டும் காலை 5 முதல் 7 மணி வரை மலைக் கோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. காலையில் செல்லும் பக்தா்கள் மாலை 6 மணிக்குள் கீழிறங்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் சிவராத்திரி, சித்ரா பௌா்ணமி காலங்களில் பிப்ரவரி முதல் மே வரை மலைக் கோயில் பாதை திறக்கப்பட்டு கால அவகாசமின்றி பக்தா்கள் சென்று வருவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.

இந்நிலையில் மலைக் கோயிலுக்குச் செல்லும் பாதை பிப்ரவரி 15 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், நெகிழிப் பொருள்கள் மற்றும் போதைப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தா்களைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com