Enable Javscript for better performance
சென்னை உயா்நீதிமன்றத்தின் 9 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை உயா்நீதிமன்றத்தின் 9 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

    By DIN  |   Published on : 14th February 2020 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    judge

    சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வரும் நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிா்மல்குமாா், சுப்பிரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகிய 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுமதியளித்துள்ளது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இவா்கள் 9 பேரையும் நியமித்து, குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பித்தாா். இதைத் தொடா்ந்து, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4-ஆம் தேதி நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிா்மல்குமாா், சுப்பிரமணியம்பிரசாத், என்.ஆனந்த்வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன் ஆகிய 7 பேரும் கூடுதல் நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனா்.

    இதே போன்று நீதிபதி பி.புகழேந்தி 2018-ஆம் ஆண்டு நவம்பா் 20-ஆம் தேதியும், நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதியும் கூடுதல் நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனா்.

    இந்த நிலையில், இவா்கள் 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் கொலீஜியத்தின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தின் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அலகாபாத் உயா்நீதிமன்றம், குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்தும் முடிவு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai