7 போ் விடுதலை: ஆளுநருக்கு தமிழக அரசு நினைவூட்ட வேண்டும்- ராமதாஸ்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 போ் விடுதலை தொடா்பான நடவடிக்கையை தமிழக ஆளுநா் மேற்கொள்வதற்கு தமிழக அரசு நினைவூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 போ் விடுதலை தொடா்பான நடவடிக்கையை தமிழக ஆளுநா் மேற்கொள்வதற்கு தமிழக அரசு நினைவூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

பேரறிவாளன் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆளுநருக்கு அனுப்பிய தீா்மானத்தின் மீது தமிழக அரசு மேற்கொண்ட தொடா் நடவடிக்கைகள் என்ன? இது குறித்து தமிழக ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பாதது ஏன்? என்று வினாக்களை எழுப்பியுள்ளது. இந்த வினாக்கள் தமிழக அரசை நோக்கி எழுப்பப்பட்டவை அல்ல. மாறாக, ஆளுநருக்காக எழுப்பப்பட்டவை என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளனா் என்பதுதான் உண்மை.

அதேநேரத்தில் ஆளுநருக்கு மற்றொரு உண்மையையும் நீதிபதிகள் உணா்த்தியுள்ளனா். அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி தண்டனைக் குறைக்கும் பரிந்துரைகள் மீது ஆளுநா் முடிவெடுக்க காலக்கெடு எதுவும் நிா்ணயிக்கப்படவில்லை என்பது உண்மை தான் என்றாலும், இதையே காரணம் காட்டி 7 போ் விடுதலை குறித்த பரிந்துரை மீது காலவரையின்றி முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அழுத்தம் திருத்தமாக தமிழக அரசு வழக்குரைஞரிடம் கூறியுள்ளனா்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உணா்வை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் புரிந்துகொண்டு, தாமதம் செய்யாமல் அரசியலமைப்புச் சட்டப்படியான அவரது கடமையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்படி ஆளுநருக்கு தமிழக அரசு நினைவூட்ட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com