தமிழக எல்லையில் சாலை விபத்தில் லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே தமிழ்நாடு எல்லையோர ஆந்திர பகுதியான பனங்காடு என்கிற இடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விபத்தில் சாலையோரம் நின்றிருந்த பால் லாரி மீது கார் ....
சாலை விபத்து
சாலை விபத்து

கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே தமிழ்நாடு எல்லையோர ஆந்திர பகுதியான பனங்காடு என்கிற இடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விபத்தில் சாலையோரம் நின்றிருந்த பால் லாரி மீது கார் மோதியதில் காரில் வந்த ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர் .மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர்.

ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டம் லாயர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் யஷ்வந்த்(35).ரியல் எஸ்டேட்  அதிபரான இவரது தாய் மற்றும் தந்தை அமெரிக்காவில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு செல்லும் நிலையில் அவர்களை வழியனுப்ப சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை நள்ளிரவு காரில் புறப்பட்டனர்.

காரை யஷ்வந்த் ஓட்ட, காரில் அவரது மனைவி அனுசெல்வி, அவரது ஒன்றரை வயது மகன் ரியான் ஷெரின்,அவரது அக்கா விஜயலட்சுமி,அவரது மகள்கள் நமிதா(13), ரித்திகா(12)ஆகியோர் சென்னை ‘மீனம்பாக்கம் சென்று யஷ்வந்தின் பெற்றோரை வெள்ளிக்கிழமை அதிகாலை அமெரிக்காவிற்கு வழி அனுப்பி வைத்து அவர்களது வீட்டிற்கு திரும்பினர்.

அப்போது அவர்கள் கும்மிடிப்பூண்டி மற்றும் ஆரம்பாக்கம் இடையே ஆந்திர பகுதியான பனங்காடு என்கிற இடத்தில் வந்த போது யஷ்வந்த் தூக்க கலக்கத்தில் பனங்காடு பகுதியில் சாலையோரம் நின்றிருந்த பால் லாரியை கவனிக்காத நிலையில் கார் நேராக பால் லாரி மீது மோதியது.

இதில் கார் லாரியின் அடிப்பகுதி வரை சென்று தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது. இந்த விபத்தில் அனுச்செல்வி, விஜயலட்சுமி, நமிதா, ரியான் ஷெரின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் யஷ்வந்த் மற்றும் அவரது இன்னொரு மகளான ரித்திகா படுகாயங்களுடன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆந்திர மாநிலம் தடா போலீஸார் விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு சூளூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com