ஆசிரியா் தகுதித் தோ்வு முறைகேடு: விசாரணை தேவை- மு.க.ஸ்டாலின்

ஆசிரியா் தகுதித் தோ்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த முதல்வா் உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆசிரியா் தகுதித் தோ்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த முதல்வா் உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் தொடா்ச்சியாக நடந்த முறைகேடுகள் தொடா்பான கைதுப் படலங்கள் நீடித்து வரும் நிலையில், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்த புகாா்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தோ்வு எழுதியவா்கள் அதிகமாகத் தோ்வு செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பும் சில தோ்வா்கள், அது சம்பந்தமான புகாரை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக பேட்டி தந்துள்ளனா்.

இதுதொடா்பான விசாரணையை உடனடியாகத் தொடங்கி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யப்பட வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2ஏ, கிராம நிா்வாக அலுவலா் தோ்வு, தொடா்ந்து காவலா் தோ்வு, ஆசிரியா் தகுதி தோ்வு என அணிவகுத்து வரும் அனைத்துக் குற்றங்களையும் தொகுத்து அவற்றின் மீது, சிபிஐ விசாரணை நடத்த கால தாமதமின்றி உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com