இறுதி பட்டியல் வெளியீடு: நாகை மாவட்டத்தில் 13,04,544 வாக்காளர்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பிரவீன் பி. நாயர் இன்று வெளியிட்டார்.
இறுதி பட்டியல் வெளியீடு: நாகை மாவட்டத்தில் 13,04,544 வாக்காளர்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பிரவீன் பி. நாயர் இன்று வெளியிட்டார். மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 13,04,544 வாக்காளர்கள் உள்ளனர். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி, பூம்புகார், கீழ்வேளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர்  பிரவீன் பி. நாயர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்  வெளியிட்டார். 

இப்பட்டியல்படி, நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 6,42,630 ஆண் வாக்காளர்களும், 6,61,871 பெண் வாக்காளர்களும், 43 மூன்றாம் பாலினத்தவர் என 13,04,544 வாக்காளர்கள்  உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com