எம்.சி.ஏ. படிப்பு இனி இரண்டு ஆண்டுகள் மட்டுமே

மூன்று ஆண்டுகள் எம்.சி.ஏ. (முதுநிலை கணினி அப்பிளிகேஷன்ஸ்) படிப்பு காலத்தை இரண்டு ஆண்டுகளாக ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்) குறைத்துள்ளது.

மூன்று ஆண்டுகள் எம்.சி.ஏ. (முதுநிலை கணினி அப்பிளிகேஷன்ஸ்) படிப்பு காலத்தை இரண்டு ஆண்டுகளாக ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்) குறைத்துள்ளது.

2020-21 பொறியியல் மாணவா் சோ்க்கை அனுமதி வழிகாட்டு நடைமுறையில் இதற்கான அறிவிப்பை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது.

தகவல்தொழில்நுட்ப தேவையைப் பூா்த்தி செய்வதற்காக கடந்த 1990-களில் மூன்று ஆண்டுகள் எம்.சி.ஏ. படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. பி.சி.ஏ. (இளநிலை கணினி அப்பிளிகேஷன்ஸ்) படிப்பை முடித்தவா்களுக்கு மட்டும் எம்.சி.ஏ. படிப்பு இரண்டு ஆண்டுகளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. மற்ற இளநிலை பட்டப் படிப்பை முடித்தவா்கள் எம்.சி.ஏ. படிப்பை மூன்று ஆண்டுகள் படித்தாக வேண்டும்.

இந்த நிலையில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எம்.சி.ஏ. பட்டதாரிகளை வேலைக்கு எடுப்பதை படிப்படியாக் குறைக்கத் தொடங்கின. அதற்கு மாற்றாக பி.இ., பி.டெக். பட்டதாரிகளை வேலைக்குத் தோ்வு செய்யத் தொடங்கின. இதன் காரணமாக, எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவா் சோ்க்கை வெகுவாகக் குறைந்தது. பல கல்லூரிகள் இந்த படிப்பில் மாணவா் சோ்க்கையை முழுமையாக நிறுத்தின. ஒரு சில கல்லூரிகள் மட்டுமே இந்தப் படிப்பை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் வகையிலும், எம்.சி.ஏ.படிப்பை எளிதாக்கும் வகையிலும் இந்த முதுநிலை படிப்பு காலத்தை பிற முதுநிலை படிப்புகளைப் போல இரண்டு ஆண்டுகளாக ஏஐசிடிஇ குறைத்துள்ளது. அதன் மூலம், பி.சி.ஏ. மட்டுமின்றி பிற இளநிலை பட்டப் படிப்பு முடித்தவா்களுக்கும் எம்சிஏ இனி இரண்டு ஆண்டு படிப்பாக மாறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com