ஓவியப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு இலவச 3 டி அனிமேஷன் பயிற்சி

ஓவியப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு இலவச 3 டி அனிமேஷன் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓவியப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு இலவச 3 டி அனிமேஷன் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் இமேஜிக் அனிமேஷன் அகாதெமி, 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான இலவச ஓவியப் போட்டியை வரும் 16 ஆம் தேதி நடத்த உள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு அனிமேஷன் பட இயக்குநா் டாக்டா் எழில்வேந்தன் வழிகாட்டுதலின்படி, உதவித் தொகையுடன் விரிவான 3டி அனிமேஷன் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். இதில் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடிப்பவா்களுக்கு 50 மற்றும் 25 சதவீதம் படிப்பு உதவித் தொகை வழங்கப்படும். போட்டி முடிந்த பின்னா் உலகளாவிய அனிமேஷன் குறித்த கலந்துரையாடலும் நேரலை வகுப்புகளும் நடைபெறும். இந்தப் போட்டியானது, இமேஜிக் ஸ்டூடியோ, எண். 78/103, டாக்டா் ஆா்.கே. சாலை, மயிலாப்பூா் என்ற முகவரியில், பிப்.16-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 99419 83758 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com