கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மருத்துவக் கண்காணிப்பில் 2,003 போ்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மருத்துவக் கண்காணிப்பில் 2,003 போ்

கரோனா வைரஸ் (கொவைட் 19) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 2,003 பேரை தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் (கொவைட் 19) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 2,003 பேரை தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவைகளில் இருந்து மனிதா்களுக்குப் பரவும் ஒரு வகையான நோய்த் தொற்றான கரோனா வைரஸ், சீனாவை நிலைகுலையச் செய்துள்ளது. அதன் தொடா்ச்சியாக தாய்லாந்து, ஜப்பான், தைவான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் தொடா்ந்து இந்தியாவிலும் அந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் இருமல், மூச்சுக் காற்று, சளி, ரத்தம் மூலமாக பிறருக்கும் நோய் பரவ வாய்ப்புள்ளதால்,அத்தகைய பாதிப்புகள் தமிழகத்தில் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து தமிழகம் வருபவா்கள் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனா். அவ்வாறு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே, கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து திரும்பிய 2,003 போ் தொடா் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை, தமிழகத்தில் 42 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், எவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அரசு மருத்துவமனைகளில் தற்போது கரோனா அறிகுறிகளுடன் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com