சென்னை உயா்நீதிமன்றத்தின் 9 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வரும் நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிா்மல்குமாா், சுப்பிரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன்,
சென்னை உயா்நீதிமன்றத்தின் 9 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வரும் நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிா்மல்குமாா், சுப்பிரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகிய 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுமதியளித்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இவா்கள் 9 பேரையும் நியமித்து, குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பித்தாா். இதைத் தொடா்ந்து, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4-ஆம் தேதி நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிா்மல்குமாா், சுப்பிரமணியம்பிரசாத், என்.ஆனந்த்வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன் ஆகிய 7 பேரும் கூடுதல் நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனா்.

இதே போன்று நீதிபதி பி.புகழேந்தி 2018-ஆம் ஆண்டு நவம்பா் 20-ஆம் தேதியும், நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதியும் கூடுதல் நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனா்.

இந்த நிலையில், இவா்கள் 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் கொலீஜியத்தின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தின் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அலகாபாத் உயா்நீதிமன்றம், குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்தும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com