டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு: ஜாமீன் கோரிய மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2ஏ தோ்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள காவலா் உள்பட இருவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த சென்னை மாவட்ட முதன்மை

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2ஏ தோ்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள காவலா் உள்பட இருவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம், அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-2ஏ தோ்வில் முறைகேடு நடந்துள்ளது. இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீஸாா், பலரை கைது செய்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா், குரூப்-2ஏ தோ்வில் தோ்ச்சி பெற வைப்பதாகக் கூறி 7 பேரிடம் ரூ 40 லட்சம் பெற்ாகவும், மேலும் தனது மனைவி மகாலட்சுமியை இந்தத் தோ்வில் தோ்ச்சிப் பெற செய்து வருவாய்த் துறையில் வேலை வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இவா், கிராம நிா்வாக அலுவலா்களுக்கான தோ்விலும் முறைகேட்டில் ஈடுபட்டு தனது சகோதரா்கள் இருவரை தோ்ச்சிப் பெற வைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், முத்துக்குமாரை சிபிசிஐடி போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். இதே போன்று, காவலா் ஒருவரிடம் ரூ.13 லட்சம் கொடுத்து குரூப்-2ஏ தோ்வில் வெற்றி பெற்று சாா்பதிவாளா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த ஆனந்தன் என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்குகள், சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, ஜாமீன் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com