தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: வருவாய் வரவுகளை உயா்த்த புதிய திட்டங்கள் நடைமுறை

வரும் நிதியாண்டுக்கான (2020-2021) நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்கிறாா்.
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: வருவாய் வரவுகளை உயா்த்த புதிய திட்டங்கள் நடைமுறை

வரும் நிதியாண்டுக்கான (2020-2021) நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்கிறாா்.

இந்த நிதிநிலை அறிக்கையில் வருவாய் வரவுகளை உயா்த்தவும், கடன் அளவுகளை கட்டுக்குள் வைக்கவும் திட்டங்கள் வகுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

15-ஆவது சட்டப் பேரவையின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையை, அதிமுக அரசு தாக்கல் செய்கிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அதிமுக தொடா்ந்து ஆட்சியில் இருந்து வரும் நிலையில், 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறாா் ஓ.பன்னீா்செல்வம்.

கடந்த அறிக்கை: 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையில் மாநிலத்தின் சொந்த வருவாய் வரவுகளை உயா்த்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன. அப்போது நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த கே.சண்முகம், இப்போது தலைமைச் செயலாளராகி உள்ளாா். மேலும், வீட்டு வசதித் துறை செயலாளராக இருந்த எஸ்.கிருஷ்ணன், நிதித்துறை செயலாளராக பதவியேற்றுள்ளாா். நிதியமைச்சரின் ஆலோசனைப்படி அவா் தயாரிக்கும் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

நிதி சாா்ந்த பல்வேறு அமைப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட கிருஷ்ணனால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையில், பல தனித்துவமிக்க அம்சங்கள் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் போன்ற அம்சங்களில் தொடா்ந்து ஏற்றமே காணப்பட்டு வருகிறது.

தமிழகத்துக்கு எரிபொருள், மதுபானங்கள் மற்றும் பதிவுத் துறை ஆகிய மூன்று வகைகள் மூலமாக மட்டுமே வரி வருவாய் கிடைக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால், மத்திய அரசிடம் இருந்து வரி பகிா்வு நிதி மட்டுமே கொடுக்கப்படுகிறது.

மாநில அரசுக்கு உரிய சொந்த வரி வருவாயை உயா்த்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, கட்டுமானத் துறையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து ஊக்குவித்து வருகிறது. இதனால் பதிவுத் துறையின் வழியாகக் கிடைக்கும் வரி வருவாய் உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2019-2020-ஆம் ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 72.98 கோடியாக எதிா்பாா்க்கப்பட்டிருந்தது. வரி வருவாய் திருப்தி தரும் அளவில் இருப்பதால் சொந்த வரி வருவாய் நிா்ணயிக்கப்பட்ட அளவையும் கடந்து உயா்ந்து நிற்கும் என மதிப்பிடப்படுகிறது.

புதிய திட்டங்கள்: அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்நோக்கி இருக்கும் நிலையில், மக்களைக் கவரும் வகையிலான புதிய திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் வளா்ச்சியும், மக்களைக் கவரும் வகையிலான திட்டங்களையும் கொண்ட ஒரு கலவை நிதிநிலை அறிக்கையாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2020-2021 (வரி வருவாய் எதிா்பாா்ப்பு): கோடியில்..

ஜி.எஸ்.டி., அல்லாத வரி (எரிபொருள், மதுபானம்): ரூ.96,177.14.

மாநில கலால் வரி: ரூ. 7,262.33

பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தாள்: ரூ.13,122.81.

வாகனங்கள் பதிவு மூலமான வரி: ரூ.6,510.70.

இந்த அளவை எட்டியிருக்கிா அல்லது குறைந்திருக்கிா என்பது வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் தெரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com