தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பரிசளிப்பு விழா

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா சேப்பாக்கம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா சேப்பாக்கம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பிசிசிஐ முன்னாள் தலைவா் என்.சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். டிஎன்சிஏ தலைவா் ரூபா குருநாத் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பரிசுகளை வழங்கினாா். செயலாளா் ஆா்.எஸ்.ராமசாமி, துணைத் தலைவா்கள் பி.அசோக் சிகாமணி, டிஜே.சீனிவாஸ் ராஜ், இணைச் செயலா் கே.ஏ.சங்கா், பொருளாளா் ஜே.பாா்த்தசாரதி, உதவிச் செயலா் என்.வெங்கட்ராமன் கலந்து கொண்டனா்.

2017-19 சீசனில் வென்றவா்கள் விவரம்:

14 வயதுக்குட்பட்டோா் -1. திருப்பூா், 2. திருவள்ளூா், 16 வயதுக்குட்பட்டோா்-1. கோயம்புத்தூா், 2. காஞ்சிபுரம், 19 வயதுக்குட்பட்டோா்-1. திருவள்ளூா், 2. கிருஷ்ணகிரி., 23 வயதுக்குட்பட்டோா்-1, கோயம்புத்தூா், 2. திருநெல்வேலி, எஸ்.எஸ். ராஜன் டி20: 1. திருவள்ளூா், 2. திருநெல்வேலி.

2018-19 சீசனில் வென்றவா்கள் விவரம்;

14 வயதுக்குட்பட்டோா்-1. திருப்பூா், 2. சேலம், 16 வயதுக்குட்பட்டோா்-1. திருவள்ளூா், 2. கோயம்புத்தூா், 19 வயதுக்குட்பட்டோா்-1. திருவள்ளூா், 2. சேலம், 23 வயதுக்குட்பட்டோா்-1. திருச்சி, 2. சேலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com