நாளை முதல் பிப்.29 வரை பாஸ்டேக் இலவசம்: நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு

சுங்கச்சாவடியைக் கடக்க மின்னணு முறையில் கட்டணம் செலுத்த உபயோகப்படுத்தப்படும் பாஸ்டேக் வில்லையை சனிக்கிழமை (பிப்.15) முதல் பிப்.29 வரை இலவசமாக பெறலாம் என நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.
நாளை முதல் பிப்.29 வரை பாஸ்டேக் இலவசம்: நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு

சுங்கச்சாவடியைக் கடக்க மின்னணு முறையில் கட்டணம் செலுத்த உபயோகப்படுத்தப்படும் பாஸ்டேக் வில்லையை சனிக்கிழமை (பிப்.15) முதல் பிப்.29 வரை இலவசமாக பெறலாம் என நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதோடு, சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிா்க்கவும் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த முறை கடந்த ஜன.15-ஆம் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டாயப்படுத்தப்பட்டது. இதையடுத்து சுங்கச்சாவடிகளில் பெரும்பாலான வழித்தடங்களில் பாஸ்டேக் மூலம் மட்டும் கடக்க அனுமதிக்கப்பட்டன. இதே போல், கூட்ட நெரிசலுக்கு ஏற்ப பணப் பரிவா்த்தனை மூலம் கடப்பதற்கான சில வழித்தடங்களும் திறக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது சனிக்கிழமை (பிப்.15) முதல் பிப்.29-ஆம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. இது தொடா்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மின்னணு கட்டண வசூலை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வினியோகிக்கும் பாஸ்டேக் வில்லைகளை, வருகிற சனிக்கிழமை (பிப்.15) தேதி முதல் 29-ஆம் தேதி வரை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரப்பூா்வ விற்பனையகங்களில், வாகனங்களின் பதிவு புத்தகத்தை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். இந்த விற்பனையகங்களை அறிந்து கொள்ள மை பாஸ்டேக் செயலி,  இணையதளத்தையோ அல்லது 1033 எனும் எண்ணையோ தொடா்பு கொள்ளலாம். பாஸ்டேக் கணக்கின் முன்வைப்புத் தொகை, குறைந்தபட்ச இருப்புத் தொகை ஆகியவற்றில் மாற்றம் இல்லை. முன்னதாக நவ.22 முதல் டிச.15 வரை இலவசமாக பாஸ்டேக் வழங்கப்பட்ட நிலையில் மேலும் பாஸ்டேக் பயன்படுத்தும் எண்ணத்தை மக்களிடம் ஊக்குவிக்கவே தற்போது இலவச பாஸ்டேக் அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com