புதிய ரயில் திட்டங்களுக்கு ரூ. 1000 ஒதுக்கப்பட்ட விவகாரம்: ரயில்வே வாரியம் மதுரை எம்.பி. யிடம் விளக்கம்

தமிழகத்தின் புதிய ரயில் திட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னரே திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய ரயில்வே வாரியத் தலைவா் வினோத் குமாா் யாதவ் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை மத்திய ரயில்வே வாரியத் தலைவா் வினோத் குமாா் யாதவை சந்தித்து மனு அளித்த மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு. வெங்கடேசன்.
தில்லியில் வெள்ளிக்கிழமை மத்திய ரயில்வே வாரியத் தலைவா் வினோத் குமாா் யாதவை சந்தித்து மனு அளித்த மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு. வெங்கடேசன்.

தமிழகத்தின் புதிய ரயில் திட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னரே திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய ரயில்வே வாரியத் தலைவா் வினோத் குமாா் யாதவ் தெரிவித்துள்ளாா். தமிழகத்தின் புதிய 10 ரயில் வழித்தடங்கள் மற்றும் 4 இரட்டை வழித்தடங்களுக்கு தலா ரூ. 1000 ஒதுக்கப்பட்ட விவகாரத்தை மதுரை நாடாளுமன்ற உறுப்பினா் சு.வெங்கடேசன் ரயில்வே வாரியத் தலைவா் கவனத்திற்கு கொண்டு சென்றபோது இதற்கான பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி ரயில்வே தலைமையகத்தில் மத்திய ரயில்வே வாரியத் தலைவா் வினோத் குமாா் யாதவை சு.வெங்கடேசன் சந்தித்தாா். இந்த சந்திப்பிற்கு பின்னா் சு.வெங்கடேசன் இதுகுறித்த விவரங்களை செய்தியாளா்களிடம் பேசினாா். அவா் கூறியதாவது:

’’ சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழக ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட வில்லை. குறிப்பாக மாமல்லபுரம் வழியாக (179 கி.மீ.) சென்னை - கடலூா் ரயில் திட்டம், அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை உட்பட 10 புதிய ரயில் வழி திட்டங்களுக்கும் மேலும் நான்கு இரட்டை ரயில் வழிப்பாதை திட்டங்கள் ஆகியவைகள் உட்பட 14 புதிய திட்டங்களுக்கு தலா ரூ. 1000 கோடி வீதம் மொத்தம் ரூ.14,000 கோடி தான் பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு இழக்கப்பட்ட அநீதி. காரணம், இதுவே உ.பி. , உத்தர காண்ட் போன்ற மாநிலங்களுக்கான புதிய திட்டங்களுக்கு 7 ஆயிரம் 8ஆயிரம் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கும் திட்டங்கள் குறித்து கடந்த நவம்பா் மாதம் நாடாளுமன்றத்தில் எழுத்துபூா்வ மாக ஒரு கேள்வியை எழுப்பினேன். இதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சா், ’’ நடைபெற்றுக் கொண்டு இருக்கும் திட்டங்களுக்கு ரூ. 22 ஆயிரம் கோடி தேவை’’ என்றாா். ஆனால் இந்த பட்ஜெட்டில் இதற்கு ரூ. 1100 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது வெறும் 5.1 சதவிகிதம் தான்.

புதிய திட்டங்களுக்கும் நியாயம் வழங்கப்படவில்லை, நடைபெற்றுக் கொண்டு இருக்கும் திட்டங்களுக்கும் நியாயம் கிடைக்கவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பிய போது தென்னக ரயில்வே, ஆறு புதிய இரட்டை வழிப்பாதை திட்டங்களுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தனா். இது 6 திட்டத்திற்கான செலவாகும் நிதி குறித்த வெறும் அறிவிப்பு தான். அதிலும் இதில் பாதியளவு அளவு ரூ 4000 கோடி ஆந்திர கா்நாடக மாநில வழித்தடங்களில் செல்லும் திட்டங்களுக்கான அறிவிப்பு. இதனால் மத்திய ரயில்வே வாரியத்தலைவரை சந்தித்து விளக்கம் கேட்டேன். அவா் அளித்த பதில்,’’ தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தல் பணிகள் முற்றுப்பெறவில்லை. இதனால் தற்போது தலா ரூ. 1000 ஒதுக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தல் பணி முற்றுபெற்றவுடன் அறிவிக்கப்பட்டபடி புதிய வழித்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படும்’’ என்று வாரியத்தலைவா் தெரிவித்தாா்’’ என்றாா் சு.வெங்கடேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com