மதுக்கடைகளை திறப்பது அரசின் கொள்கையாக இருக்கக் கூடாது: ராமதாஸ் 

மதுக்கடைகளை திறப்பது அரசின் கொள்கையாக இருக்கக் கூடாது என்று பாமக நிறவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகளை திறப்பது அரசின் கொள்கையாக இருக்கக் கூடாது: ராமதாஸ் 

மதுக்கடைகளை திறப்பது அரசின் கொள்கையாக இருக்கக் கூடாது என்று பாமக நிறவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், தமிழகத்தில் மூடப்பட்ட 400 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர மதுக்கடைகளை திறப்பது அல்ல!

தமிழகத்தில் மதுக்கடை எண்ணிக்கை கூடி விட்டது. படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு என்ன ஆனது? மு.க.ஸ்டாலின்- சரி தான். அதேபோல திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையும் ஒன்று கூடிவிட்டது. மது ஆலைகளை மூடுவதாக  2016-ல் திமுக அளித்த வாக்குறுதி என்னவானது என்பதையும் கேளுங்கள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com