மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்

சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலத்தில் செந்தில்பாலாஜி இன்று ஆஜரானார். 
செந்தில்  பாலாஜி
செந்தில் பாலாஜி

சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலத்தில் செந்தில்பாலாஜி இன்று ஆஜரானார். 

கடந்த 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில்பாலாஜி. அப்போது, அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.80 கோடி மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி உள்பட பலர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், ஏற்கெனவே 12 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் சென்னை மற்றும் கரூரில் உள்ள செந்தில்பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து செந்தில்பாலாஜியும், அவரது சகோதரரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், நீதிபதி பி.டி.ஆதிகேசவலுவின் முன்பு திங்கள்கிழமை ஆஜராகி, செந்தில்பாலாஜியை விசாரணைக்கு ஆஜராகக்கூறி சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினமே நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீனும் வழங்கியது. இதன் காரணமாக, சம்மன் பிறப்பித்தும் பலனின்றி போய்விட்டது. எனவே, முன்ஜாமீன் உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும், என முறையீடு செய்தார்.

இதைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பாக வரும் 14-ஆம் தேதி செந்தில்பாலாஜி ஆஜராக வேண்டும். மேலும், முன்ஜாமீன் உத்தரவில் திருத்தம் கோருவது தொடர்பாக அரசுத் தரப்பில் திருத்த மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். இந்நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலத்தில் செந்தில்பாலாஜி இன்று ஆஜரானார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதல்வராவார். எத்தனை வழக்கு தொடுத்தாலும் அதை சட்டப்படி எதிர்கொள்வேன். மேலும் விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வரத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com