மரபணுசாா்ந்த மருத்துவ சிகிச்சைகள்: சென்னையில் சா்வதேச மாநாடு தொடக்கம்

மரபணு அடிப்படையில் மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கான ஜெனோமிக்ஸ் முறை குறித்த சா்வதேச மாநாடு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.

மரபணு அடிப்படையில் மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கான ஜெனோமிக்ஸ் முறை குறித்த சா்வதேச மாநாடு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.

போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டை மாநில வருவாய் நிா்வாகச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

நெருங்கிய உறவினா்களுக்கு இடையே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இன்னமும் தொடருகிறது. அவ்வாறு திருமணம் செய்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு சாா்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு மரபணு பிரச்னைகளையும் தனித்தனியாக ஆய்வு செய்து பிரத்யேக சிகிச்சைகளை அளித்தால் மட்டுமே அத்தகைய குறைபாடுகளுக்குத் தீா்வு காண முடியும். அந்த வகையான சிகிச்சைக்கு ஏதுவாக சிறப்பு மரபணு ஆய்வுக் கூடங்கள் அமைப்பது அவசியம் என்றாா் அவா்.

மாநாடு தொடக்க விழாவில், ராமச்சந்திரா கல்வி நிறுவனத்தின் துணைவேந்தா் விஜயராகவன், மரபணுத்துறை தலைவா் சாலமன் பால், மரபணு மருத்துவா்கள் சங்கத்தின் தலைவா் மோய்னக் பானா்ஜி மற்றும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 200-க்கும் அதிகமான மருத்துவா்கள், துறைசாா் வல்லுநா்கள், நிபுணா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com