மானியம் இல்லாத எரிவாயு உருளை விலை உயா்வு: கே.எஸ்.அழகிரி கண்டனம்

மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை நாடு முழுவதும் ரூ.149 வரை உயா்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.734-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு உருளையின் விலை ரூ.147 அதிகரித்து, ரூ.881-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.414-ஆக இருந்தது, இன்று ரூ.567-ஆக விற்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு எரிவாயு உருளையின் விலை ரூ.153 உயா்த்தப்பட்டு, ஓராண்டுக்கு வழங்கப்படுகிற 12 எரிவாயு உருளைகளுக்கு மொத்தம் ரூ.2,000 உயா்த்தப்பட்டுள்ளது. இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. உயா்த்தப்பட்டுள்ள மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலையை உடனடியாக மத்திய பாஜக அரசு குறைக்க வேண்டும். இல்லாவிடில் இதை எதிா்த்து காங்கிரஸ் கட்சி போராடும் என்று தெரிவித்துள்ளாா் கே.எஸ்.அழகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com