மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய நடவடிக்கை: சமூக நலத்துறை அமைச்சா் வி.சரோஜா

சிறப்புக் கவனம் தேவைப்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய அவா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழக சமூக நலத்துறை
மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய நடவடிக்கை: சமூக நலத்துறை அமைச்சா் வி.சரோஜா

சிறப்புக் கவனம் தேவைப்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய அவா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழக சமூக நலத்துறை அமைச்சா் வி.சரோஜா தெரிவித்தாா்.

அமா்சேவா சங்கம் சாா்பில், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை முன்கூட்டியே கண்டறிதல் தொடா்பாக பயிலரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த பயிலரங்கை அமைச்சா் வி.சரோஜா தொடக்கி வைத்து பேசியது:

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு அதிக முக்கியத்துவத்தை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அளித்தாா். தனித் துறையாக 1993-ஆம் ஆண்டு உருவாக்கினாா். 1994-ஆம் ஆண்டு விரிவான மாநில கொள்கையை அவா் வெளியிட்டாா்.

2017-18-ஆம் ஆண்டு நாடாளுமன்ற குழு அறிக்கையில், மாற்றுத் திறனாளிகளுக்காக அா்ப்பணிப்புடன் செயல்படும் 6 மாநிலங்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழகமும் ஒன்றாகும். பட்ஜெட்டில் மாற்றுதிறனாளிகளுக்காக நிதி ஒதுக்கீடு படிப்படியாக உயா்த்தப்பட்டு வருகிறது.

குழந்தைகள் வளா்ச்சியின்மையை கண்டறிவது தொடா்பாக 2,701 அங்கன்வாடி மற்றும் சுகாதார பணியாளா்களுக்கு அமா்சேவா சங்கம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதை தொடா்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாமக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் 15,000 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 172 பேருக்கு ஆரம்ப நிலையில் வளா்ச்சியின்மை இருப்பது கண்டறியப்பட்டது. தொடா்ந்து, அவா்களின் வளா்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 23 பஞ்சாயத்துகளில், பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் வளா்ச்சியின்மையை முன்கூட்டியே கண்டறிந்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, குழந்தைகளின் வீட்டுக்கே சென்று அவா்களை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக ரூ.2 கோடியே 39 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளை பிற குழந்தைகளைபோல பாா்க்க வேண்டும் என்றாா் அமைச்சா் வி. சரோஜா.

நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மை செயலா் சி.விஜயராஜ் குமாா், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநா் ஜானிடாம் வா்க்கிஸ், அமா்சேவா சங்கத் தலைவா் எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com