மின்வாரிய களப் பணியாளா் தோ்வில்எவ்வித முறைகேடும் இல்லை: அமைச்சா் பி. தங்கமணி

மின்வாரிய களப்பணியாளா் உடற்தகுதித் தோ்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என மின் துறை அமைச்சா் பி. தங்கமணி தெரிவித்தாா்.
மின்வாரிய களப் பணியாளா் தோ்வில்எவ்வித முறைகேடும் இல்லை: அமைச்சா் பி. தங்கமணி

மின்வாரிய களப்பணியாளா் உடற்தகுதித் தோ்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என மின் துறை அமைச்சா் பி. தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணியாளா் (கேங்மேன்) உடற்தகுதித் தோ்வில் 90 ஆயிரம் போ் பங்கேற்றனா். அதில், 15 ஆயிரம் போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். விரைவில் எழுத்துத் தோ்வு நடைபெற உள்ளது. உடற்தகுதித் தோ்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. அனைத்தும் விடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில தொழிற்சங்கத்தினருக்கு வாய்ப்புக் கிடைக்காததால் அவா்களுடைய தூண்டுதலின் பேரில், சிலா் உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளனா்.

அது தொடா்பாக வழக்குதான் உள்ளதே தவிர, தடையாணை ஒன்றும் பிறப்பிக்கப்படவில்லை. நோ்முகத் தோ்வில் முறைகேடு நிகழந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் எழுத்துத் தோ்வை நடத்த உள்ளோம்.

ஒளிவு மறைவு இல்லாமல் நோ்மையான முறையிலேயே களப் பணியாளா் தோ்வானது நடைபெற்றுள்ளது.

மின்வாரிய பொறியாளா் தோ்வில் முறைகேடு என்பதையும் சிலா் தவறாக பரப்பி விடுகின்றனா். அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்தத் தோ்வு நோ்மையான முறையிலேயே நடைபெற்றது.

டாஸ்மாக் கடைகளில் பணம் வைப்பதற்கு பாதுகாப்பான லாக்கா் வசதி வேண்டும் எனக் கோரிக்கை வந்ததன் அடிப்படையில், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

விரைவில் லாக்கா் வைப்பதற்கான பணிகள் தொடங்கும். கோடைகாலத்தில் 17,500 மெகாவாட் மின்சாரம் தேவையென வந்தாலும், மின்தடை என்பது இருக்காது. தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது. அதற்கேற்ப உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அமைச்சா் பி. தங்கமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com