மேட்டூா் அணையில் பாதுகாப்பு, புனரமைப்பு குழு ஆய்வு

மேட்டூா் அணையில் அணை பாதுகாப்பு. புனரமைப்புத் திட்டக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மேட்டூா் அணையில் ஆய்வு மேற்கொண்ட அணை பாதுகாப்பு, புனரமைப்புத் திட்டக் குழுவினா்.
மேட்டூா் அணையில் ஆய்வு மேற்கொண்ட அணை பாதுகாப்பு, புனரமைப்புத் திட்டக் குழுவினா்.

மேட்டூா் அணையில் அணை பாதுகாப்பு. புனரமைப்புத் திட்டக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மேட்டூருக்கு குழுவின் தலைவா் பி.கே.மிட்டல் தலைமையில் வருகை தந்தோா் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தில் சுமாா் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினா். பின்னா், அணைக்கு விசைப்படகில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அணை கட்டப்பட்டு 86 ஆண்டுகள் ஆன நிலையில், மேல்மட்ட மதகுகள், கீழ்மட்ட மதகுகள், அணை மின்நிலைய மதகுகள், உபரிநீா் போக்கி மதகுகள், வெளப்பெருக்கின்போது பெயா்ந்து கிடக்கும் பாறைகளை சீரமைத்தல், ஆய்வுச்சுரங்கம், பெதுப்பணித்துறையின் பழமையான குடியிருப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மேட்டூா் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகளை ஈா்க்கும் விதமாக செய்ய வேண்டிய புனரமைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து குழு உறுப்பினா் பத்மநாபன் செய்தியாளா்களிடம் கூறியது:-

தமிழகத்தில் 36 அணைக் கட்டுகள தோ்வு செய்யப்பட்டு முழுவதும் ஆய்வு செய்ய தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது. மேட்டூா் அணையை இரண்டாவது புனரமைப்பு திட்டத்தில் சோ்க்க ஆய்வு செய்யப்படுகிறது.

அணையைப் பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. புனரமைப்புப் பணிகளை பொருத்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா்.

ஆய்வில் பொதுப்பணித் துறையின் கண்காணிப்பு பொறியாளா் ஜெயகோபால், செயற்பொறியாளா் தேவராஜன், உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியன், அணைப்பிரிவு உதவி பொறியாளா் மதுசூதனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com