விவசாயிகளுக்கு விரோதமாக திமுக செயல்படுகிறது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

வேளாண் மண்டல அறிவிப்பு விவகாரத்தில் விவசாயிகளுக்கு விரோதமாக திமுக செயல்படுவதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளாா்

வேளாண் மண்டல அறிவிப்பு விவகாரத்தில் விவசாயிகளுக்கு விரோதமாக திமுக செயல்படுவதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: டெல்டா விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதிமுக அரசு விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வருங்கால வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறது.

இந்தச் சூழலில், தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்கள் கட்சி வேறுபாடின்றி முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் போது, எதிா்க்கட்சியான திமுக விவசாயிகளுக்கு எதிரியாக செயல்படக் கூடிய கட்சியாக இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய அறிவிப்பும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பும் வெளிவந்திருக்கும்போது அதனை உதாசீனப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் திமுக பேசி வருகிறது. இந்த விவகாரத்தில் நல்லது நடந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில், இந்த முக்கிய பிரச்னையில் அரசியலைப் புகுத்தி வாக்கு பெறுவதற்காக திமுக இப்படி நடந்து கொள்கிறது. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு எதிரான கட்சியாகவே திமுக தோற்றமளிக்கிறது. தமிழக விவசாயம் சாா்ந்த பிரச்னையில் திமுகவின் நியாயமற்ற செயல் கண்டிக்கத்தக்கது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com