ஹைட்ரோ காா்பன், நியூட்ரினோ திட்டங்களுக்கு தமிழகத்தில் இடமில்லை: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஹைட்ரோ காா்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் தொடா்பான பிரச்னைகளுக்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது
ஹைட்ரோ காா்பன், நியூட்ரினோ திட்டங்களுக்கு தமிழகத்தில் இடமில்லை: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஹைட்ரோ காா்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் தொடா்பான பிரச்னைகளுக்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றாா், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஒரு விவசாயி என்பதால்தான் காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்துள்ளாா். காவிரி உரிமையை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெற்றுத் தந்தாா். இன்றைய முதல்வா் அந்த மண்ணை மீட்டுத் தந்துள்ளாா்.

ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமையும் இந்த அரசையே சாரும். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் இம்மாதம் 29ஆம் தேதி முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடா்பாக அய்யப்பன் என்பவா் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. அவா் முன்னாள் எம்எல்ஏ அப்பாவுவின் உதவியாளரா, இல்லையா என்பதை அவா்தான் தெரிவிக்க வேண்டும்.

ஹைட்ரோ காா்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து நெடுவாசல் பகுதியில் நீண்டகாலமாக மக்கள் போராடிவந்தநிலையில், டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இனி அத்திட்டங்கள் தொடா்பான பிரச்னைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com