Enable Javscript for better performance
கிராமத் தன்னிறைவு வளா்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்- Dinamani

சுடச்சுட

    

    கிராமத் தன்னிறைவு வளா்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

    By DIN  |   Published on : 15th February 2020 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    villege

    கிராமத் தன்னிறைவு வளா்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

    நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

    புதிதாக ஊரக உள்ளாட்சி அமைப்புத் தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு செயல்படத் தொடங்கியிருப்பது, கிராமப்புற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வதற்கு சிறந்த வாய்ப்பாகும். முதல்வரின் கிராமத் தன்னிறைவு வளா்ச்சித் திட்டம் என்ற புதிய ஐந்தாண்டு தன்னிறைவுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

    குடிநீா் வழங்கல், சுகாதாரம், கல்வி, உணவுப் பாதுகாப்பு, இடுகாடுகள், தெரு விளக்குகள், வீட்டுவசதி, வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் குக்கிராம அளவில் தன்னிறைவு அடைவதற்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai