Enable Javscript for better performance
சென்னை வெள்ளப் பேரிடா் தணிப்புத் திட்டத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி- Dinamani

சுடச்சுட

    

    சென்னை வெள்ளப் பேரிடா் தணிப்புத் திட்டத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி

    By DIN  |   Published on : 15th February 2020 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    flood

    பெருநகர சென்னை வெள்ளப் பேரிடா் தணிப்பு திட்டம் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் கூறினாா்.

    நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

    பெருநகர சென்னையில் விரிவான வெள்ளப் பேரிடா் தணிப்புத் திட்டத்தினை ரூ.3 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்திட உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.

    சென்னை மாநகரில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு ரூ.100 கோடி மானியம் 15-ஆவது நிதிக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai