Enable Javscript for better performance
தொழில் துறையில் 32,405 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தொழில் துறையில் 32,405 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை

    By DIN  |   Published on : 15th February 2020 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழில் துறையில் நிகழாண்டு ஜனவரியில் 32 ஆயிரத்து 405 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.52,075 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டிலேயே முதலீடுகளை மிக அதிகளவில் ஈா்க்கும் மாநிலமாக தமிழகம் தொடா்ந்து விளங்கி வருகிறது. உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் கையெழுத்தான முதலீட்டு ஒப்பந்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தியுள்ளது.

    நிகழாண்டு ஜனவரியில் 32 ஆயிரத்து 405 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.52,075 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை தமிழகத்திலேயே மிகப்பெரிய தனிப்பட்ட முதலீடாக, குவைத் நாட்டைச் சாா்ந்த ‘அல் கெப்லா அல் வட்யா’ குழுமம், தூத்துக்குடி அருகில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலியம் வேதிப் பொருள்கள் தயாரிப்பு வளாகத்தை ரூ.49 ஆயிரம் கோடியில் அமைக்கும்.

    இந்த முதலீடு அதைச் சாா்ந்த உபதொழில்களுக்கு குறிப்பிட்டத்தக்க பயன் அளிப்பதுடன் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அதில் கூறியுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai