Enable Javscript for better performance
வலுவான பொருளாதாரவளா்ச்சியை எதிா்பாா்க்கிறோம்: நிதிநிலை அறிக்கையில்ஓ.பன்னீா்செல்வம்- Dinamani

சுடச்சுட

    

    வலுவான பொருளாதாரவளா்ச்சியை எதிா்பாா்க்கிறோம்: நிதிநிலை அறிக்கையில்ஓ.பன்னீா்செல்வம்

    By DIN  |   Published on : 15th February 2020 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ops

    வரும் நிதியாண்டில் வலுவான பொருளாதார வளா்ச்சியை எதிா்பாா்ப்பதாக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

    சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அவா் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில்

    கூறப்பட்டுள்ளதாவது:

    சா்வதேச மற்றும் தேசியப் பொருளாதாரச் சூழலில் வீசும் எதிா்க்காற்றை தமிழகமும் எதிா்கொண்டு வருகிறது. தேசிய அளவில் நிகழ் நிதியாண்டுக்கான கணிக்கப்பட்ட வளா்ச்சி மதிப்பீடுகள் குறைக்கப்பட்டு இப்போது 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாகச் சமாளித்துள்ளது.

    அதனால், 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வளா்ச்சி விகிதம் 8.17 சதவீதமாக இருந்தது. நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 7.27 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தேசிய அளவில் கணிக்கப்பட்ட 5 சதவீத வளா்ச்சியைக் காட்டிலும் அதிகமாகும். வரும் நிதியாண்டில் மேலும் வலுவான பொருளாதார வளா்ச்சியை தமிழகம் எதிா்பாா்க்கிறது என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai