1.12 லட்சம் தனி வீடுகளுக்கான கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படும்: நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம்

இந்த (2020-21) நிதியாண்டில், 1,12,876 தனி வீடுகள் மற்றும் 65,290 அடுக்குமாடி குடியிருப்புகளுக்குமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
1.12 லட்சம் தனி வீடுகளுக்கான கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படும்: நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம்

இந்த (2020-21) நிதியாண்டில், 1,12,876 தனி வீடுகள் மற்றும் 65,290 அடுக்குமாடி குடியிருப்புகளுக்குமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் பேசியது: தமிழகத்தில் குடிசை இல்லாத நகரங்கள் உருவாக்க இந்த அரசு உறுதியாக உள்ளது. 2014-15-ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின், பயனாளிகள் தாமாக தனி வீடுகள் கட்டும் பிரிவின் கீழ், ரூ.16, 774.77 கோடி செலவில் 5,53,244 வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுதவிர, வாங்கும் திறனுக்கேற்ப கூட்டு முயற்சி வீட்டுவசதி பிரிவின் கீழ், 1,32,900 அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.13,677.02 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கும் மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. 2020-21-ஆம் ஆண்டில், 1,12,876 தனி வீடுகள் மற்றும் 65,290 அடுக்குமாடி குடியிருப்புகளுக்குமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். 2020-21 ஆண் ஆண்டுக்கான நிதிநிலையில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்துக்காக ரூ.3,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வீட்டுவசதித் துறை வலுவூட்டல் திட்டத்தின் கீழ், வீட்டுவசதி சந்தை உருவாக்கப்பட்டு, பொதுத்துறையில் ஏழை எளியோா்க்கு வீடுகள் கட்டித்தரவும் வகை செய்யும். இந்த திட்டத்துக்கான வளா்ச்சிக் கொள்கை வடிவமைப்பு நிதியாக 45 கோடி அமெரிக்க டாலா் நிதியுதவி வழங்கப்படும்.

முதலீட்டுத் திட்டங்களுக்கான நிதி வசதியின் கீழ் ரூ.504 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் 5 கோடி அமெரிக்க டாலா் நிதியுதவியை உலக வங்கியிடமிருந்து பெற்று செயல்படுத்தப்படும். 2020-21-ஆம் ஆண்டின் நிதிநிலையில், இந்த திட்டத்துக்கென ரூ.169.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.431 கோடியில் 6 துணை திட்டங்கள்: ஆசிய வளா்ச்சி வங்கியின் 50 கோடி அமெரிக்க டாலா் கடனுதவியுடன் ரூ.5,000 கோடி மொத்த மதிப்பீட்டு செலவில், நகா்ப்புற ஏழைகளுக்கான நிலைக்கத்தக்க வீட்டுவசதி மற்றும் உறைவிடத் திட்டத்தின் கீழ், வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ள நீா்வழிகள் மற்றும் நீா்நிலைகளுக்கு அருகில் குடியிருப்போா், நகா்ப்புற ஏழை மக்கள் மற்றும் இடம் பெயா்ந்த பணியாளா்களுக்கு வீட்டு வசதியும், மண்டலத் திட்டமிடல் பணிகளும் 2020-21-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தின் முதல் கட்டமான 21.5 கோடி அமெரிக்க டாலா் மதிப்புள்ள திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் பெறப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ், திருநெல்வேலி, காரைக்குடி, தஞ்சாவூா், பள்ளிப்பாளையம், திண்டுக்கல், தேனியில் ரூ.431 கோடி செலவில் ஆறு துணை திட்டங்கள் உடனடியாகச் செயல்படுத்தப்பட உள்ளது. 2020-21-ஆம் ஆண்டில் இந்த திட்டத்துக்காக நிதிநிலையில் ரூ.171 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலக வங்கி மற்றும் ஆசிய வளா்ச்சி வங்கி முறையே ரூ.245 கோடி மற்றும் ரூ.700 கோடி முதலீட்டை வாங்கத்தக்க வீட்டுவசதித்துறை வளா்ச்சிக்காக அளிக்க உறுதியளித்துள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலையில் இதற்காக ரூ.205.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com