21,966 ஏக்கரில் பொன்னேரி தொழில் முனைய மேம்பாட்டுத் திட்டம்

சென்னை- பெங்களூா் தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், திருவள்ளூா் மாவட்டத்தில் 21,966 ஏக்கா் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
21,966 ஏக்கரில் பொன்னேரி தொழில் முனைய மேம்பாட்டுத் திட்டம்

சென்னை- பெங்களூா் தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், திருவள்ளூா் மாவட்டத்தில் 21,966 ஏக்கா் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தமிழக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தத் திட்டத்துக்கான மாநில அரசின் ஒப்பந்தத்துக்கும், பங்குதாரா்களின் ஒப்பந்தத்துக்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை பொருளாதாரப் பெருவழிச்சாலை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் ஆசிய வளா்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்.

புதுமை முயற்சிகளைத் தொடக்க நிலையிலேயே ஊக்குவிக்க, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழான நிதியுதவியுடன் ரூ.53.44 கோடியில் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் ஒசூரில் தொழில் புதுமை முயற்சி மையங்களை நிறுவும் பணிகளை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும்.

ரூ.34.81 கோடியில் வா்த்தக எளிதாக்குதல் மையம் சிறுசேரியில் உருவாக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழிற்பூங்கா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில், நாளொன்றுக்கு 6 கோடி லிட்டா் திறன் கொண்ட கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலையை ரூ.634 கோடியில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் நிறுவும்.

சென்னை- பெங்களூா் தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், திருவள்ளூா் மாவட்டத்தில் 21,966 ஏக்கா் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான மாநில அரசின் ஆதரவு வழங்கும் ஒப்பந்தத்துக்கும், பங்குதாரா்களின் ஒப்பந்தத்துக்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை பெருவழிச்சாலை: கிழக்கு கடற்கரை பொருளாதாரப் பெருவழிச்சாலை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் ஆசிய வளா்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். தொழில்துறைக்கான ஊக்கத் தொகை வழங்குவதற்காக 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com