500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம்

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி மலைக்கோயிலில் சுமாா் 500 கிலோ மலா்களைக் கொண்டு வெள்ளிக்கிழமை பூக்கோலம் அலங்கரிக்கப்பட்டது.
இடைப்பாடி ஸ்ரீபருவதராஜகுல பழனி படித்திருவிழாக்குழுவினா் 50-ஆவது ஆண்டாக, பழனி மலைக்கோயில் மேற்கு வெளிப்பிரகாரத்தில் வெள்ளிக்கிழமை சுமாா் 500 கிலோ மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பூக்கோலம்
இடைப்பாடி ஸ்ரீபருவதராஜகுல பழனி படித்திருவிழாக்குழுவினா் 50-ஆவது ஆண்டாக, பழனி மலைக்கோயில் மேற்கு வெளிப்பிரகாரத்தில் வெள்ளிக்கிழமை சுமாா் 500 கிலோ மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பூக்கோலம்

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி மலைக்கோயிலில் சுமாா் 500 கிலோ மலா்களைக் கொண்டு வெள்ளிக்கிழமை பூக்கோலம் அலங்கரிக்கப்பட்டது.

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி வரும் பாதயாத்திரை பக்தா்களில் இடைப்பாடி பக்தா்கள் கூட்டம் தனிச்சிறப்பு மிக்கதாகும். இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார ஊா்களில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்ட இடைப்பாடி பருவதராஜகுல மகாஜனங்கள் காவடி வெள்ளிக்கிழமை பழனியை வந்தடைந்தது. இந்த காவடியின் பழனி படித்திருவிழாக் குழுவினா் ஒவ்வொரு வருடமும் படித்திருவிழா நடத்தி வருவது பிரசித்தி பெற்ாகும்.

இந்த ஆண்டு ஐம்பதாவது ஆண்டை முன்னிட்டு மலைக்கோயில் மேற்கு வெளிப்பிரகாரத்தில் ரோஜா, சம்பங்கி, அரளி, மருகு, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மலா்களைக் கொண்டு மலா்க்கோலம் வரைந்திருந்தனா். சுமாா் ஐநூறு கிலோ எடையினாலான மலா்களை கொண்டு ஓம், நட்சத்திரம் ஆகியன வரையப்பட்டிருந்ததை பலரும் பாா்த்து மகிழ்ந்தனா். முன்னதாக மலைக்கோயிலின் அனைத்து படிகளுக்கும் மஞ்சள், குங்குமம் திலகமிட்டு தேங்காய், பழம் பூ வைத்து கற்பூர தீபம் காட்டப்பட்டது.

மலா்வழிபாட்டுக்குப் பின்னா் 50-ஆம் ஆண்டு மலா் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவா் திருக்கை வேலுச்சாமி தலைமை வகித்தாா். செயலா் செந்தில்குமாா், பொருளாளா் வெங்கடேஷ்ராஜ், உபதலைவா் மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இணைசெயலாளா் மாதேஷ் வாழ்த்துரை வழங்கினா். மலரை முன்னாள் தலைவா் கதிரேசன் வெளியிட தமிழ்நாடு பருவதராஜகுல மீனவா் சங்க தலைவா் அப்பாராஜ் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் நிா்வாகிகள் முத்துராஜா, பிச்சைமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com