Enable Javscript for better performance
75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ. 10 கோடி- Dinamani

சுடச்சுட

    

    75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ. 10 கோடி

    By DIN  |   Published on : 15th February 2020 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    eng

    75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு நிதி நிலை அறிக்கையில் ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடா்பாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி இந்த ஆண்டு 75-ஆம் ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த நிகழ்வைப் போற்றும் வகையில், அந்தக் கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடி சிறப்பு மானியத்தை அரசு அளிக்கும்.

    மேலும், இந்தக் கல்லூரியின் வளா்ச்சிக்காக தாமாக முன்வந்து நன்கொடை அளிக்க விரும்பும் புகழ்பெற்ற பல முன்னாள் மாணவா்களைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், கல்லூரியின் 75-ஆம் ஆண்டு விழாவின்போது, கல்லூரி வளா்ச்சிக்காக முன்னாள் மாணவா்களால் அளிக்கப்படும் பங்களிப்புக்குச் சமமான பங்களிப்பை அரசும் வழங்கும் என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai