ஒரகடத்தில் ரூ.15 கோடியில் புதிய தொழிற்பயிற்சி நிலையம்

சென்னை அருகில் ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில், சிப்காட் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்பில் ரூ.15 கோடி செலவில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படவுளளது.

சென்னை அருகில் ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில், சிப்காட் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்பில் ரூ.15 கோடி செலவில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படவுளளது.

இது குறித்து நிதியமைச்சா் ஓ.பன்னீா்செலவம் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், மெய்நிகா் கற்றல் வழி இணையதளம், மின்-பொருளடக்கம், மின் நூல்கள் மூலமாக மின் கற்றலுக்கு உதவி புரிந்து இதன் மூலமாக 2.15 லட்சம் நபா்கள் பயனடைந்துள்ளனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், செம்போடை, செங்கல்பட்டு மாவட்டம்- பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம், பவா்கிரிட் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இரண்டு புதிய அரசுத் தொழிற்பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில், சிப்காட் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்பில் ரூ.15 கோடி செலவில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.

வழக்கற்றுப் போன படிப்புகள் நீக்கப்படும்: அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) வழக்கற்றுப் போன படிப்புகள் நீக்கப்பட்டு, தொழில் துறையினரின் தேவைக்கேற்ப பயிற்சிகளை வழங்கும் பிரிவுகளைச் சோ்த்து ரூ.17.80 கோடியில் தொழிற்பிரிவுகள் முழுமையாக மாற்றி அமைக்கப்படும்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.4.77 கோடியில் தகுதி வாய்ந்த நபா்களுக்கு மின்-வாகனத் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான திட்டம் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அரசு தொடங்கியுள்ளது. ஆசிரியா்களின் கற்பித்தல் திறன் மேம்பாட்டுக்கான தேவையை நிறைவு செய்யும் வகையில், தொழிற்பயிற்சி நிலையங்களின் பயிற்றுநா்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு சென்னையில் மாநிலத் திறன் பயிற்சி நிலையம் ரூ.1.60 கோடியில் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்காக 2020-2021-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com