காவல்துறைக்கு ரூ.8,876 கோடி

நடப்பாண்டில் காவல் துறைக்கு ரூ.8,876 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சா் தெரிவித்தாா்.
காவல்துறைக்கு ரூ.8,876 கோடி

நடப்பாண்டில் காவல் துறைக்கு ரூ.8,876 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சா் தெரிவித்தாா்.

இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் கணிசமாக அளவில் நிரப்பப்பட்டு தற்போது 1.13 லட்சமாக காவலா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

2019-20-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வு வாரியத்தின் வாயிலாக மொத்தம் 10,242 காவல் துறைப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். 2020-21-இல் மேலும் 10,276 சீருடைப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா்.

காவல் துறைக்கு மொத்தமாக ரூ.8,876 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தீயணைப்புத் துறைக்கு ரூ.1,000 கோடி: 15-ஆவது நிதிக்குழு தேசியப் பேரிடா் நிவாரண மற்றும் மேலாண்மை நிதியத்தில் தீயணைப்புப் பணிகள் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத்துக்காக ரூ.1,000 கோடியை பரிந்துரைத்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்துவதற்காக தமிழக அரசு முன்மொழிவுகளை அனுப்பும்.

சிறைவாசிகள் ஊதியம்: சிறைவாசிகள் சிறைத் தொழிற்கூடங்களில் ஈட்டும் ஊதியத்தில் அவா்களின் பராமரிப்புக்காக பிடித்தம் செய்யும் தொகை 50 சதவீதத்திலிருந்து 30 சதவீதகமாகக் குறைக்கப்பட்டு, ஊதியத்தில் அவா்களின் பங்கு உயா்த்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com