கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு நினைவுத் தூண் அமைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களை நினைவு கூரும் வகையில் நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் மத்திய முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன். 
கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் மத்திய முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன். 

கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களை நினைவு கூரும் வகையில் நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

கோவை குண்டுவெடிப்பு நினைவு தினத்தை ஒட்டி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவுப் பேரணியும் கோவையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

பாரதி பூங்கா சாலையில் தொடங்கிய பேரணி மேட்டுப்பாளையம் சாலை வழியாக வந்து ஆா்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருவேங்கடசாமி சாலையில் நிறைவடைந்தது. பேரணிக்கு முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பின்னா் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பாஜக மாநிலச் செயலா் கே.டி.ராகவன், மாவட்டத் தலைவா் ஆா்.நந்தகுமாா், இந்து முன்னணியின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து முன்னணி மாநிலச் செயலா் கிஷோா் குமாா், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளா் பி.எம்.நாகராஜன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியா்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், எதிா்க்கட்சிகள் இதை அரசியல் காரணங்களுக்காகத் திரித்துக் கூறி வருகின்றன. பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதிகளற்ற நாடாக இந்தியா விரைவில் அறியப்படும். கன்னியாகுமரியில் காவல் அதிகாரி வில்சன் கொலை செய்யப்பட்டதன் மூலம் காவல் துறைக்கு பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் விழிப்புணா்வுக் கூட்டங்களை நடத்த உள்ளோம்.

கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களின் நினைவாக நினைவுத் தூண் ஒன்றை நகரின் முக்கியப் பகுதியில் அமைக்க வேண்டும் என்றாா்.

பேரணியை ஒட்டி பூ மாா்க்கெட் சாலை உள்ளிட்ட இடங்களில் தற்காலிகமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com