சுகாதாரத் துறைக்கு ரூ.15,863 கோடி! புதிய மருத்துவக் கல்லூரிகள், திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

வரும் நிதியாண்டில் சுகாதாரத் துறை சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த ரூ.15, 863 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை
சுகாதாரத் துறைக்கு ரூ.15,863 கோடி! புதிய மருத்துவக் கல்லூரிகள், திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

வரும் நிதியாண்டில் சுகாதாரத் துறை சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த ரூ.15, 863 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்துவதற்கும் அந்தத் தொகையில் இருந்து நிதியளிக்கப்படவுள்ளது.

இதுதொடா்பாக நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்ததாவது: நாட்டிலேயே சுகாதாரத் துறையில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் விளைவாக, குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 -ஆம் ஆண்டில் ஆயிரம் குழந்தைகளுக்கு 24-ஆக இருந்த இறப்பு விகிதம், 2017 -ஆம் ஆண்டில் 16-ஆகக் குறைந்துள்ளது. அதேபோன்று, பேறு கால பெண்கள் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.

டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகளுக்கு தலா ரூ.18,000 நிதியுதவியாக வழங்கப்படுகிறது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ் 60.64 லட்சம் ஏழை கா்ப்பிணி தாய்மாா்கள் ரூ.6, 033 கோடி நிதியுதவி பெற்றுள்ளனா். வரும் 2020-21 -ஆம் ஆண்டில் அத்திட்டத்தை செயல்படுத்த ரூ.959 கோடி ஒதுக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தவும், தொற்றா நோய் மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் ரூ. 2, 857 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் சுகாதார சீரமைப்புத் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதனை வரும் ஆண்டிலும் செயல்படுத்த ரூ. 260.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காப்பீட்டுத் திட்டம்: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை, 41.12 லட்சம் பயனாளிகள் ரூ.6, 601 கோடி மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுள்ளனா். அத்திட்டத்துக்கு எதிா் வரும் நிதியாண்டில் ரூ. 1, 033 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக நிதி நிலை அறிக்கையில் சுகாதாரத் துறை திட்டங்களுக்காக ரூ. 15, 863 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com