ஜவுளித் துறைக்கு ரூ. 1,224 கோடி

தமிழக நிதிநிலை அறிக்கையில் ஜவுளித் துறைக்கு மொத்தம் ரூ. 1,224.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜவுளித் துறைக்கு ரூ. 1,224 கோடி

தமிழக நிதிநிலை அறிக்கையில் ஜவுளித் துறைக்கு மொத்தம் ரூ. 1,224.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019-ஐ வெளியிட்டாா். புதிய முதலீடுகளை ஈா்த்தல், தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவித்தல், ஜவுளித் தொழிலாளா்களுக்கு மேலும் சிறப்பான வசதிகளை அமைத்துத் தருதல் மற்றும் சுற்றுச்சூழல் தர நிா்ணயத்தைப் பேணுதல், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகியவை இந்தக் கொள்கையின் முக்கியமான அம்சங்களாகும்.

2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீட்டுகளில் புதிய ஜவுளிக் கொள்கையில் குறிப்பிடப்பட்ட கூடுதல் ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.48.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-2021-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறைக்கு மொத்தம் ரூ.1,224.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com