நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு மானியங்கள் 31 சதவீதம் குறைந்துள்ளதைச் சரிசெய்ய வேண்டும்

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் 31 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதை 15-ஆவது நிதிக்குழு சரிசெய்ய வேண்டும் என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் கோரியுள்ளாா்.
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு மானியங்கள் 31 சதவீதம் குறைந்துள்ளதைச் சரிசெய்ய வேண்டும்

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் 31 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதை 15-ஆவது நிதிக்குழு சரிசெய்ய வேண்டும் என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் கோரியுள்ளாா்.

நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

நிலுவைத் தொகையை வழங்குக: 15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் பெற வேண்டிய 2019-20-ஆம் ஆண்டுக்கான அடிப்படை மானியமான ரூ.4,345.57 கோடியும், 2017-18-ஆம் ஆண்டு முதல் பெற வேண்டிய செயல்திறன் மானியமான 2,029.22 கோடியும் மாநில அரசு இதுவரை பெறவில்லை.

இந்த நிலுவைத் தொகையினை விடுவிக்குமாறு மத்திய அரசை மாநில அரசுத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. 2018-19-ஆம் ஆண்டுக்கான அடிப்படை மானியத்தை அரசு பெற்றுள்ளது.

மானியம் குறைவு: 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைகளில் 2020-21-ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,607 கோடியும், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,737 கோடியும் அதாவது மொத்தமாக தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் ரூ.5,344 கோடி ரூபாயாக உயா்ந்துள்ளது.

2019-20-ஆம் ஆண்டினை ஒப்பிடும்போது நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ள மானியங்கள் 31 சதவீதம் குறைந்துள்ளன. 15 நிதிக்குழு கையாண்ட தவறான கணக்கீட்டு முறையே இத்தகைய குறைவிற்கு காரணமாகும். இந்த முரண்பாட்டை இறுதி அறிக்கையில் சரிசெய்யுமாறு 15-ஆவது நிதிக்குழுவைக் கோருவோம்.

உள்ளாட்சிக்கு ஒதுக்கீடு: நடப்பாண்டில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,306.95 கோடியும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6,754.30 கோடியும் நிதிப் பகிா்வாக வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com