பாரத் ஸ்டேஜ்-6 தரத்தில் 2,213 புதிய பேருந்துகளை வாங்க ரூ.960 கோடி ஒதுக்கீடு

பாரத் ஸ்டேஜ்-6 (பி எஸ்-6 ) தரம் கொண்ட 2,213 புதிய பேருந்துகளை வாங்கும் திட்டத்தை செயல்படுத்த 2020-21-ஆம் நிதியாண்டு ரூ.960 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாரத் ஸ்டேஜ்-6 தரத்தில் 2,213 புதிய பேருந்துகளை வாங்க ரூ.960 கோடி ஒதுக்கீடு

பாரத் ஸ்டேஜ்-6 (பி எஸ்-6 ) தரம் கொண்ட 2,213 புதிய பேருந்துகளை வாங்கும் திட்டத்தை செயல்படுத்த 2020-21-ஆம் நிதியாண்டு ரூ.960 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் பேசியது: தமிழகத்தில் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு அரசின் பொது போக்குவரத்து வசதிகள் பெரும் பங்காற்றியுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில், சராசரியாக 6.58 ஆண்டுகள் ஆயுள் காலம் கொண்ட 19,496 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் இயக்கச் செயல்பாட்டுத்திறன் குறியீடுகள் தொடா்ந்து மேம்பட்டு வருகிறது. மேலும், எரிபொருள் இயக்கத்திறனும் ஒரு லிட்டருக்கு 5.34 கிலோ மீட்டராக உயா்ந்துள்ளது. விபத்து விகிதமும் ஒரு லட்சம் கி.மீட்டராக இயக்கத்துக்கு 0.12 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

பேருந்துக் கட்டணங்களை குறைந்த அளவில் வைத்திருப்பதுடன் போக்குவரத்துக் கழகங்களின் இயக்கச் செயல்திறனையும், நிதி நிலையையும் மேம்படுத்தி பொதுப் போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதில், இந்த அரசு உறுதியுடன் உள்ளது.

ரூ.1,580 கோடி மதிப்பிலான பாரத் ஸ்டேஜ்-6 தரம் கொண்ட 2,213 புதிய பேருந்துகளை வாங்குவதற்கு ஏதுவாக, ஜொ்மன் வளா்ச்சி வங்கியிடமிருந்து முதல்கட்ட நிதியுதவி பெறுவதற்கான திட்ட ஒப்பந்தம், 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் 26-ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. இத்திட்டத்தைச் செயல்படுத்த, 2020-21-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலையில் ரூ.960 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஃபேம் இந்தியா -2 திட்டத்தின்கீழ், 525 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளும் விரைவில் இறுதி செய்யப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com